×

எய்ம்ஸ் காவலரை தாக்கிய வழக்கு சோம்நாத் பார்திக்கு 2 ஆண்டு சிறை: கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவு

புதுடெல்லி: எய்ம்ஸ் செக்யூரிட்டியை தாக்கிய வழக்கில், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சோம்நாத் பார்திக்கு கீழ் நீதிமன்றம் விதித்த இரண்டாண்டு சிறை தண்டனையை உறுதி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பார்தி, கெஜ்ரிவாலின் முதல் அரசின் சட்ட அமைச்சராக பணியாற்றியவர். இவர், கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதியன்று 300 பேருடன் சென்று எய்ம்ஸ் வளாகப்பகுதியில் இருந்த சுற்றுச்சுவரை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தள்ளியதாகவும், அதனை தடுக்க முயன்ற பாதுகாவலரை அடித்ததாகவும் புகார் எழுந்தது. இதுபற்றி எய்ம்ஸ் தலைமை செக்யூரி அதிகாரி போலீசில் புகார் அளித்தார. அதன்பேரில் நடவடிக்கை எடுத்து பார்திக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் பார்திக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு இரண்டாண்டு சிறை தண்டணை விதித்து உத்தரவிட்டது. மேலும் சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வசதியாக பார்திக்கு ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில், தனக்கு எதிராக இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து பார்தி மேல்முறையீடு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று சிறப்பு நீதிபதி விகாஷ் துல் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பார்தி தரப்பு வக்கீல் வாதிடுகையில், கவுதம் நகருக்கும் ரிங் ரோட்டுக்கும் இடையிலான ‘நல்லா’ (வடிகால்) ஒரு பொதுச் சொத்து என்பதால் அதை மூடிமறைக்க எய்ம்சுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை என்றும், எனவே, பொது பயன்பாட்டிற்காக திறக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். ஆனால், அந்த கால்வாய் உள்ள பகுதியை ​​மூடிமறைப்பு மற்றும் பராமரிப்புக்காக எய்ம்ஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது விசாரணையின் போதுஅரசு தரப்பு நிருபித்தது.  இதையடுத்து சோம்நாத் பார்த்தியின் வாதங்களை ஏற்க மறுத்து, அவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த இரண்டாண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.எனினும், நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323 (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்), 353 (அரசு ஊழியரை கடமையை செய்யவிடாமல் தடுக்க பல பிரயோகம் செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிருபிக்கவில்லை. எனவே, இந்த பிரிவுகளின் பார்தியை தண்டிக்க முடியாது.

இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம் சட்டரிதியான தவறை இழைத்துள்ளது என கூறி, அந்த பிரிவு குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேபோன்று, இந்த வழக்கில் பிரிவு 147ன் கீழ் பார்தி உட்பட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டாலும், அதில் பார்தியை தவிர அனைவரும் கீழ் நீதிமனறத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதில் கீழ் நீதிமன்றம் எந்தவித தவறையும் இழைத்ததாக தெரியவில்லை என்றும் நீதிபதி கூறினார். பின்னர் நீதிபதி இரண்டாண்டு சிறை தண்டணையை உறுதி செய்து பிறப்பித்த நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து சோம்நாத் பார்தி போலீசார் காவலில் எடுத்து பின்னர் சிறைக்கு கொண்டு சென்றனர்.

Tags : Somnath Bharti ,AIIMS , Ames guard, Somnath, jailed for 2 years
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...