×

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கம் தர்ணா போராட்டம்

தங்கவயல்: தங்கவயல் மற்றும் பங்காரு பேட்டை தாலுகாக்களை சேர்ந்த அரசு கால்நடை மேய்ச்சல் நிலங்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளனர். வருவாய் துறை, நில‌ ஆய்வு துறை மற்றும் நகர மேம்பாட்டு கழகம் ஆகியவை இது போன்ற ஆக்கிரமிப்புகளை முறையாக ஆய்வு நடத்தாமல் அனுமதி வழங்குவது ஏன்? உடனடியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்க வேண்டும் என கோரி தங்கவயல் நகர மேம்பாட்டு கழகம் (கே.டி.ஏ.) அலுவலகத்தை கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு எதிராகவும், அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். சுமார் அரை மணிநேர தர்ணா போராட்டத்திற்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Farmers Association ,Tarna , Real Estate, Farmers Association, Dharna
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு