தேமுதிக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் இன்று முதல் பிரசாரம்

சென்னை: தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருத்தாச்சலத்தில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா போட்டியிடுகிறார். தேமுதிக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதாவும், துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பை ஏற்பட்டதை தொடர்ந்து எல்.கே.சுதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே எஞ்சியுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இன்று முதல் அவர் 5 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டியில் இன்று காலை பிரசாரத்தை தொடங்கி திருத்தணியில் இறுதியாக பிரச்சாரத்தை விஜயகாந்த் முடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>