இலைக்கு ஓட்டு போடலன்னா உங்களுக்கு நல்ல சாவே வராது: பிரசார கூட்டத்தில் சாபம் விட்ட சிட்டிங் எம்எல்ஏ

நாமக்கல் தொகுதியில் ேபாட்டியிடும் சிட்டிங் எம்எல்ஏ பாஸ்கரின் பேச்சுதான் தற்போது சர்ச்சையின் உச்சமாக மாறி இருக்காம். சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அரசின் திட்டங்களை பட்டியலிட்டவரின், வாயில் திடீரென ஆவேசம் கொப்பளித்தது. ‘‘இத்தனை திட்டங்களை கொண்டு வந்து உதவிகளை செய்த எங்கள் கட்சிக்கும் எனக்கும் நீங்கள் கண்டிப்பாக ஓட்டு போடவேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் உங்களுக்கு நல்ல சாவு வராது. நல்ல சாவு சாகமாட்டீங்க. ஏனென்றால் இத்தனை திட்டங்களை கொண்டு வந்தும் ஓட்டு போடாவிட்டால் நன்றி கெட்ட தொகுதி நாமக்கல் என்ற கெட்டபெயர் கண்டிப்பாக உங்களுக்கு வரும்’’ என்று கொந்தளித்துள்ளார். இந்த வீடியோ தொகுதி முழுவதும் வைரலாகி சாபம் விட்ட எம்எல்ஏவுக்கு சாபக்கேடாக மாறி இருக்காம்.

Related Stories: