×

கூட்டத்தை காட்ட தலைக்கு ரூ.200: காசு கொடுத்து ஆட்களை சேர்க்கும் திருச்சி கிழக்கு தொகுதி அமமுக வேட்பாளர்

திருச்சி: திருச்சியில் அமமுக பிரசாரத்தில் கூட்டத்தை காட்ட பெண்கள், ஆண்களுக்கு தலைக்கு ரூ.200 கொடுத்து அழைத்து வந்து அமமுக வேட்பாளர் மனோகரன் பிரசாரம் செய்து வருகிறார். திருச்சியில் அதிமுகவினர், அமமுகவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் போதிய வரவேற்பு இல்லாததால் பல இடங்களில் ஆட்களே இன்றி வேட்பாளர், நிர்வாகிகள் மட்டும் பிரசாரம் செய்யும் நிலை நிலவுகிறது.

இதனால் அதிமுக, அமமுக வேட்பாளர்கள் பலர் கூட்டத்ைத அதிகப்படுத்தி காட்ட பல்வேறு பகுதிகளிலும் கூலிவேலைக்கு செல்லமூ ஆண்கள், பெண்களை  தலைக்கு ரூ.200 கொடுத்து அழைத்து வந்து பிரசாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்களை அழைத்து வர, ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் பிரசாரத்தில் கலந்துகொள்வோரின் பெயர்கள் எழுதப்பட்டு பிரசாரம் முடிந்து செல்லும் போது பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி அமமுக வேட்பாளர் மனோகரன்  இன்று காலை வாணப்பட்டறை மாரியம்மன் கோயிலில் பிரசாரத்தை துவக்கினார். சத்திரம், கடைவீதி, கீழ ஆண்டார் வீதி, மேல ஆண்டார் வீதிகளில் பிரசாரம் செய்கிறார். ஒவ்வொரு இடங்களிலும்  பணம் கொடுத்து 50 பேரை  அழைத்து வந்து நிறுத்தியிருந்தனர். அதன்படி கீழ ஆண்டார் வீதியில் 50 பேர் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கு ₹200 ெகாடுக்க அவர்களது பெயர்களை பொறுப்பாளர் ஒருவர் நோட்டில் குறித்துக்ெகாண்டார்.

அவர்களுக்கு  டி, வடையும் வாங்கிகொடுத்தனர். அவர்கள் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை கடும் வெயிலில் காத்திருந்தனர். வேட்பாளர் வந்து பிரசாரம் முடிய மாலை ஆகிவிடும். அதன்பின்னர் அவர்களுக்கு பணம் சப்ளை செய்யப்படுமாம். இதுபற்றி பிரசாரத்துக்கு வந்த பெண்கள் கூறுகையில், ‘‘பிரசாரத்துக்கு அழைக்கிறார்கள், நாங்களும் காலையிலே வந்து நாள் கணக்கா காத்துகிடக்கிறோம்.

எங்களுக்கு ரூ.200 தான் தருகின்றனர். ஆனால் தலைக்கு 500 வழங்கப்படுகிறது. இடையில் உள்ளவர்கள் அதில் கமிஷன் எடுத்துக்கு கொண்டு ரூ.200 தான் எங்களுக்கு தருகின்றனர். இங்காவது டி, வடை தந்தாங்கள், நேற்று அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன் பிரசாரத்தில் பச்சை தண்ணீர் கூட தரல’’ என்று புலம்பினர்.


Tags : Trichi East ,Gasu , Rs 200 per head to show the crowd: Trichy East constituency AIADMK candidate who adds people by giving money
× RELATED அமைச்சராகியும் தொகுதியை கண்டுகொள்ளாத...