×

தமிழகத்தில் மீண்டும் கதகளி ஆடும் கொரோனா: ஒரே நாளில் 1,437 பேர் பாதிப்பு: 09 பேர் பலி; 9,145 பேருக்கு சிகிச்சை; சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 1437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 69 ஆயிரத்து 804 (8,69,804) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில்  தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 1,437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,69,804 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 902 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,48,041 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,618 ஆக உயர்ந்துள்ளது.
* அரசு மருத்துவமனையில் 05; தனியார் மருத்துவமனையில் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 532 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,42,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,89,30,484 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 76,128 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 9,145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,25,327 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 860 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,44,442 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 577 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 259 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 190.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* கர்நாடகா-2.
* மேற்கு வங்கம்-2.
* பீகார்-2.
* அசாம்-1.

* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* Saudi Arabia-2. 


Tags : Kathakali Korona ,Tamil Nadu , Corona to play Kathakali again in Tamil Nadu: 1,437 victims in one day: 09 killed; Treatment for 9,145 people; Health Department Report. !!!
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...