மதுரை மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் தினமும் வித்தியாசமான முறையில் பரப்புரை..: மூதாட்டிகளின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பரப்புரை மேற்கொள்ளும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தினமும் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார். பொட்டிபுரம், சித்திரட்டி புரம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் மூதாட்டிகளின் காலில் விழுந்து அவர்களுக்கு பொன்னாடை போற்றி வாக்கு சேகரித்தார்.

மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்துக்கு தண்ணீர் தெளித்து கொடுத்தும், அங்கு உள்ள தொழிலாளர்களிடம் அதிமுகவுக்கு வாக்கு அளிக்கும் படி கேட்டுக்கொண்டார். ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் குப்புராமு-க்கு ஆதரவாக அக்கட்சியின் முத்த தலைவர் இல.கணேஷன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், பாஜக போன்ற மிக பெரிய கட்சிகளின் மீது எதிர்க்கட்சிகளுக்கு அச்சம் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து நாமக்கல் தொகுதி எம்.எல்.ஏ.வும் அதிமுக வேட்பாளருமான கே.பி.பாஸ்கர் இருசக்கர வாகனத்தில் சென்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்ட அவர் தான் வெற்றி பெற்றவுடன் குறைகளை சரி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

Related Stories:

>