×

தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வருகை

நாகை : கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்திற்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வேளாங்கண்ணி பேராலயம் சுற்றுலாதலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்துநகர் என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் பசிலிக்கா என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.
இந்த பேராலயம் வங்கக் கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு. வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் பிப்ரவரி மாதம் 17ம் தேதியிலிருந்து தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி பேராலயம் வந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளும் வேளாங்கண்ணி பேராலயம் வந்து பக்தர்களுடன் வேளாங்கண்ணி கடற்கரையில் குளித்து மகிழ்கின்றனர்.

Tags : Velankanni Cathedral ,Lent , Nagai: Devotees on foot and in vehicles to the Velankanni Cathedral ahead of the Christian Lent
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி