×

வாணியம்பாடி போலீசில் புகார் அளிக்க வந்தவர்களிடம் ஒருமையில் பேசி வெளியே அனுப்பிய எஸ்எஸ்ஐ உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்-நேரில் விசாரணை ெசய்து எஸ்பி அதிரடி உத்தரவு

வாணியம்பாடி : வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர்களிடம் ஒருமையில் பேசி வெளியே அனுப்பிய எஸ்எஸ்ஐ உட்பட 3 பேரை போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி விஜயகுமார் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 5 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தில் அருகே பலராமன் என்பவரது நிலம் உள்ளது. இந்நிலையில், விநாயகத்திற்கும், பலராமனுக்கு இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி கடந்த பல ஆண்டுகளாக தகராறு நடந்து வருகிறது.

இந்நிலையில், மீண்டும் நிலம் தொடர்பாக இருவருக்குமிடையே கடந்த 12ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, விநாயகம், தனது மருமகன் ஆம்பூர் புது கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த சரத் என்பவருடன் சென்று வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
அப்போது, அங்கு பணியில் எஸ்எஸ்ஐ குணசேகரன்,  காவல் நிலைய எழுத்தர் காந்தி மற்றும் பெண் காவலர் துளசி உள்ளிட்ேடார் பணியில் இருந்துள்ளனர். எஸ்எஸ்ஐ குணசேகரனிடம் விநாயகம் புகார் அளித்தார். தொடர்ந்து, புகார் கொடுத்ததற்கான சிஎஸ்ஆர் வழங்கும்படி எஸ்எஸ்ஐயிடம் சரத் கேட்டுள்ளார்.

அப்போது, எஸ்எஸ்ஐ குணசேகரன் புகார் அளித்தவுடன் சிஎஸ்ஆர் கொடுக்க முடியாது, விசாரித்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு சரத் நிலம் தொடர்பாக புகார் அளித்தால் உடனடியாக சிஎஸ்ஆர் கொடுக்க வேண்டும் என்று ஆணை உள்ளது என்று எஸ்எஸ்ஐயிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, எஸ்எஸ்ஐ குணசேகரன், சரத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், சரத்தை எஸ்எஸ்ஐ குணசேகரன் ஒருமையில் பேசி திட்டி வெளியேற்றினார். இதனை சரத் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து, நேற்றுமுன்தினம் விநாயகம் மற்றும் சரத்தை அழைத்து காவல்துறையினர் சிஎஸ்ஆர் வழங்கியுள்ளர். இந்நிலையில், இதுகுறித்து எஸ்பி விஜயகுமார் தகவல் வந்ததையடுத்து வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு நேற்று நேரில் சென்று விசாரணை ெசய்தார்.

தொடர்ந்து, எஸ்எஸ்ஐ குணசேகரன், காவல் நிலைய எழுத்தர் காந்தி மற்றும் பெண் காவலர் துளசி ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் ெசய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், புகார் குறித்து வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டார்.


Tags : SP ,SSI ,Vaniyambadi police , Vaniyambadi: Three persons, including SSI, were sent out to the Vaniyambadi police station after speaking to the complainants.
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்