×

ரேஷன் கார்டு வழங்கக்கோரி திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்-சித்தூரில் நடந்தது

சித்தூர் : ரேஷன் கார்டு வழங்கக்கோரி திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி திருநங்கைகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பேசியதாவது:திருப்பதியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகிறோம்.

நாங்கள் பலமுறை எங்கள் பகுதியில் உள்ள மண்டல வருவாய்த்துறை அலுவலகத்தில் ரேஷன் கார்டு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி பலமுறை புகார் மனு வழங்கினோம்.  ஆனால், அதிகாரிகள் இதுவரை எங்கள் மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாங்கள் மண்டல வருவாய்த்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நடையாய் திரிந்து கொண்டிருக்கிறோம். மாநில அரசு திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், இதுவரை மாநில அரசு உத்தரவு பிறப்பித்தும் எங்களுக்கு ரேஷன் கார்டு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் முருகன் ஹரி நாரயாணாவிடம் மனு வழங்க வந்தோம். கொரோனா பரவல் காரணமாக மனு பெற்றவில்லை. இதனால், கலெக்டர் அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் எங்களுடைய கோரிக்கை மனுவை செலுத்தினோம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Tags : Chittoor , Chittoor: Transgender people protested demanding ration cards. Ration card and free housing at Chittoor Collector's Office
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...