குடிசைத் தொழில் பணியாளர்களின் நலன்களை பாதுகாக்க, தொழிலாளர் சட்டங்களின்படி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? : டி. ஆர். பாலு, எம்.பி. கேள்வி.

டெல்லி : திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி. ஆர். பாலு, அவர்கள், நேற்று  (22 மார்ச் 2021), மக்களவையில், குடிசைத் தொழில் பணியாளர்களின் நலன்களை பாதுகாக்க, தொழிலாளர் சட்டங்களின்படி, மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?  என்று கேள்வி எழுப்பினார்.

மாண்புமிகு மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்குவார் அவர்களிடம், குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் நலன்களை பாதுகாக்க, தொழிலாளர் சட்டங்களின்படி, மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், அவர்களின் வருமானம் மற்றும் வேலை நேரம், தொழில்சார் ஆபத்துகள் மற்றும் பணிப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான திட்டங்கள் ஏதேனும் உள்ளதா? என்றும், மக்களவையில், திரு. டி. ஆர். பாலு, விரிவான கேள்வியை, எழுப்பினார்.

மாண்புமிகு மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணையமைச்சர், அவர்கள், மக்களவையில், அளித்த பதில் பின் வருமாறு:-

அண்மையில் அறிவிக்கப்பட்ட, 29 தொழிலாளர் நலச் சட்டங்களை உள்ளடக்கிய, நான்கு தொழிலாளர் குறியீடுகளின்படி, வேலைக்கான தகுந்த கூலி, தொழில்சார் உறவுகளைப் பராமரித்தல், பணிப் பாதுகாப்பிற்கான திட்டம், தொழிலாளர்களின் சுகாதாரத்தைப் பேணுதல், தொழில்சார் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தல், சட்டப்படியான குறைந்த பட்சக் கூலி, தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம், தொழிலாளர் பணிக் கொடை ஆகியவை, மத்திய அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று, மாண்புமிகு மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்குவார் அவர்கள், மக்களவையில், திருப்பெரும்புதுலீர் நாடாளுமன்ற உறுப்பினர்,  திரு. டி. ஆர். பாலு, அவர்களுக்கு, விரிவான பதிலை அளித்துள்ளார்.

Related Stories:

More