ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை

டெல்லி: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும். மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.  

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் அங்கு வாழும் தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்ட முடியாது. இலங்கைக்கு எதிராக வாக்களிக்காவிட்டால் எதிர்காலத்திலும் தமிழரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க முடியும் போகும்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா ஆதரவு கொடுக்க வேண்டும். தமிழகம் வந்தபோது பிரதமர் மோடி கூறியபடி செயல்படுத்த வேண்டும். எந்த நாட்டில் எந்த இனம் உரிமைக்காக போராடினாலும் அதிமுக அதை ஆதரித்தே வந்துள்ளது. இனப்பிரச்சனை என்பதையும் தாண்டி முக்கியமானது என்பதால் இலங்கை தமிழருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

Related Stories:

>