×

விராலிமலை அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் டைரி சிக்கியது

புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கரின் டைரி தற்போது சிக்கி இருக்கிறது. தொகுதி முழுவதும் பணம் மற்றும் பொருட்கள் குறித்த குறிப்புகள் அதில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர். இலுப்பூர் நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் பேராவூரணியை சேர்ந்த ரமேஷ் என்பவர் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து பறக்கும் படையினர் காரை முழுவதுமாக சோதனையிட்டனர்.

இதில் காரில் சுமார் 50க்கும் மேற்பட்ட அதிமுக கரைபோட்ட சேலைகள் மற்றும் சாக்லேட் வகைகள் மளிகை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் காருக்குள் டைரி ஒன்று இருந்துள்ளது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளான மீனவேலி, பொருச்சம்பட்டி, பெரியக்கவுண்டம்பட்டி, அகலப்பட்டி பல்வேறு ஊர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்த பெயர்களுக்கு அருகே 180, 200 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சேலைகளை குறிக்கிறதா அல்லது பண விநியோகத்தை குறிக்கிறதா என்பது குறித்து தொடர்ந்து பறக்கும் படையினர் காரை ஓட்டி வந்த ரமேஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விராலிமலை தொகுதியில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் அதிக அளவில் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் வரும் நிலையில் தற்போது காரில் டைரி விஜயபாஸ்கர் பெயருடன் சிக்கி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Minister ,Vijayabaskar ,Viralimai , Viralimalai, Election Flying Corps
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு