×

மாலி நாட்டை ஒட்டிய எல்லைப் பகுதிகள் மீது பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் : 137 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக அரசு அறிவிப்பு!!

மாலி : மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துவிட்டனர். மாலி நாட்டை ஒட்டிய நைஜர் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கிராமங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இரு சக்கர வாகனங்களில் ஆயுதங்களை ஏந்தி வந்த மர்ம நபர்கள், தஹவுவா, இன்தாஜாயென், பகோராதே மற்றும் பிற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்தும் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

 அதே சமயம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 137 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நைஜர் நாட்டின் மேற்கு பகுதியில் சமீபகாலமாக பாதுகாப்புப் படையினர் மற்றும் பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத ஒழிப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் தாக்குதல் தொடர்கிறது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில், இதே பகுதியில் சோம்பங்கவ் மற்றும் ஜரவும்டேரெய் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

Tags : Mali , Mali,, terrorists homicide, attack
× RELATED நீருக்கடியில் ஆய்வு; இந்தியாவுடன்...