×

டெல்லியில் 118வது நாளாக விவசாயிகள் போராட்டம்.. 3 மாநிலங்களில் டோல் கட்டண இழப்பு ரூ.815 கோடி.. மத்திய அரசு ஷாக்

டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டம் காரணமாக மூன்று மாநிலங்களில் 815 கோடி ரூபாய் டோல் கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 117 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம் சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பது குற்றச்சாட்டாகும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக மூன்று மாநிலங்களில் 815 கோடி ரூபாய் டோல் கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் இருந்து மார்ச் மாதம் வரை இந்த டோல் கட்டண இழப்பு ஏற்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.மேலும் அவர் பேசியதாவது, நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் செய்வதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் அதிகமாக 487 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் 326 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 1.4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய போராட்டம் காரணமாக வேறு மாநிலங்களில் இழப்பு ஏற்படவில்லை. டோல் வருவாய் இல்லாமல் இந்த 3 மாநிலங்களில் மட்டும் சாலை போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது,என்றார்.



Tags : Delhi ,Shaq ,Federal Government , Delhi, farmers, struggle, toll charges, loss
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...