மாடர்ன் தொகுதியாக மாற்றுவேன்: என்.ஆர்.தனபாலன் வாக்குறுதி

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். இவர், தினமும் தொகுதி மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று மகாகவி பாரதி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், திருவள்ளுவர் நகர், மூலக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இந்த தொகுதியில் அதிகளவில் வசித்து வருகிறார்கள்.

இப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய தமிழக முதலமைச்சர் இடமளித்துள்ளதால் மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரை குப்பை கிடங்கில் உள்ள குப்பையை தரம் பிரித்து அதன் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இங்கு அதிகளவில் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபடுவோம். மாடர்ன் தொகுதியாக பெரம்பூர் தொகுதியை மாற்ற நடவடிக்கை எடுப்பேன். பெரம்பூர் தொகுதிக்கு நான் புதிதல்ல, இங்குதான் பிறந்தேன். கடந்த தேர்தலில் நூலிழையில் என்னுடைய வெற்றிவாய்ப்பு பறிக்கப்பட்டது. இந்த முறை மக்கள் எனக்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வார்கள்,’ என்றார்.

Related Stories: