வடக்கு மண்டல ஐஜிக்கு கொரோனா: விதிமீறி பொறுப்பு ஐஜியாக பெரியய்யா நியமனம்

சென்னை: வடக்கு மண்டல ஐஜியாக உள்ள சங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுப்பு ஐஜியாக பெரியய்யா நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக சங்கர் உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.

அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரம் என்பதால், வடக்கு மண்டல ஐஜியாக பெரியய்யா நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக தேர்தல் பணியில், 6 மாதத்துக்குள் ஓய்வு பெறுகிறவர்களை நியமிப்பது இல்லை. இதனால்தான் மேற்கு மண்டல ஐஜியாக பணியில் இருந்த பெரியய்யா பணி மாறுதல் செய்யப்பட்டார். ஆனால், இப்போது அவர் மீண்டும் வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி அவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Stories:

>