விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை: இந்திய கம்யூ. தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலை போல சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் முத்தரசன், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் கே.சுப்பராயன் எம்.பி, மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கையில், வட்டியில்லாத விவசாய கடன்கள் வழங்கப்படும், மாநிலத்தின் விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அரசுப்பணிகளில் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட 30 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மூத்த தலைவர் நல்லகண்ணு பேசுகையில், ‘‘தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், மாநிலத்தின் நலன்களை காக்கவும் பாஜவையும் அதனுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் சேர்ந்துள்ள இதர கட்சிகளையும் தோற்கடிப்பதே இன்றைய அரசியல் அறமாகும். தமிழகத்தில் அதிமுக-பாஜ கூட்டணியை தோற்கடித்து நாடாளுமன்ற தேர்தலை போலவே சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே வெற்றிபெறும்’’ என்றார்.

Related Stories:

>