ஹோல்டர் வேகத்தில் சரிந்தது இலங்கை

நார்த் சவுண்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 169 ரன்னுக்கு சுருண்டது. ஆன்டிகுவா, ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. கீமர் ரோச் - ஹோல்டர் கூட்டணியின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை, முதல் இன்னிங்சில் 169 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது (69.4 ஓவர்). திரிமன்னே 70 ரன் (180 பந்து, 4 பவுண்டரி), டிக்வெல்லா 32 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஹோல்டர் 17.4 ஓவரில் 6 மெய்டன் உட்பட 27 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ரோச் 3, கார்ன்வால் 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்திருந்தது.

Related Stories:

>