தமிழகத்தை காப்பாற்ற ஒரே தீர்வு ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும்: திருக்கழுக்குன்றத்தில் திருமா பேச்சு

சென்னை: திருப்போரூர் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜியை  ஆதரித்து திருக்கழுக்குன்றத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜியை  அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். பின்னர், திருமாவளவன் பேசியதாவது:எடப்பாடி பழனிசாமியை பாமக, பாஜ உள்ளிட்ட இதர கட்சிகள் எவ்வளவு தரக்குறைவாக பேச வேண்டுமோ, அவ்வளவு தரக்குறைவாக  பேசினார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனாலும், இது தேர்தல் நேரம் என்பதால் விமர்சனம் செய்த கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, கைக்கோர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

அதிமுக கூட்டணி என்பது ஒரு  சந்தர்ப்பவாத கூட்டணி, அதிமுக என்பது ஒரு திராவிட கட்சி அல்ல, அது பாஜவின் பி டீம், பாஜவின் பினாமி கட்சி,  5 ஆண்டுகள் ஆட்சி நடத்துவதற்காக மோடியிடம் அதிமுக பல்வேறு நிபந்தனைகளுக்கு  உட்பட்டு மோடியின் கட்டுப்பாட்டில் இந்த ஆட்சி இயங்கி வருகிறது. தமிழ்நாடு மிகப் பெரிய ஆபத்தான கட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டை காப்பாற்ற  ஒரே தீர்வு ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>