தர்மராயசாமி கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

பெங்களூரு: கர்நாடக மாநில அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கிவரும்  வரலாற்று சிறப்புமிக்க பெங்களூரு தர்மராயசாமி கோயில் மகா கும்பாபிஷேகம்  நாளை நடக்கிறது. பெங்களூரு  உள்ள சிட்டி மார்க்கெட்  பகுதியில் தர்மராயசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு  முறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு  மகாகும்பாபிஷேகம் நேற்று காலை யாகத்துடன் தொடங்கியது. 50க்கும் ேமற்பட்ட  புரோகிதர்கள் வேத-மந்திரங்கள் ஓதி யாகம் தொடங்கினர். பின் கணபதி பூஜை, கலசப  ஸ்தாபனம் உள்பட ஆகம விதிமுறைகள்படி நாள் முழுவதும் பூஜைகள் நடத்தப்பட்டது. இரண்டாவது நாளான இன்றும் அபிஷேக பூஜைகள் நடக்கிறது. நாளை பகல்  மகாகும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் பல வண்ண மின்  விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் மாலை தோரணங்கள்  கட்டப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

Related Stories: