மேட்டூர் தொகுதியில் போட்டியிடும் மாநிலத்தின் இளம் வேட்பாளர்

தமிழக தேர்தல் களத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசார வேகம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் அவர்கள் செய்த சாதனையையும், வருங்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களையும் முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயத்தில், வேட்பாளர் தேர்வே எங்களுக்கு ஒரு சாதனை தான் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பெருமை கொள்கின்றனர்.  

அந்த வரிசையில், சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் அனுசுயா (25), மாநில அளவில் மிகக்குறைந்த வயதுடைய வேட்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஓமலூர் அடுத்த நச்சுவாயனூரில், விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளராக உள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ள அவர், விதைப்பந்து, மரக்கன்று விநியோகத்தில் கவனம் ஈர்த்து, இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால் போதும், மேட்டூரை சிங்கப்பூர், மலேசியா போல மிகப்பெரிய சுற்றுலா நகராக மாற்றிக்காட்டுவேன் என வாக்குறுதி அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories:

>