×

இந்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் மீது நிறைய சந்தேகம் உள்ளது: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, காங்கிரஸ் நிர்வாகி சசிகாந்த் செந்தில்

* தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது பாதுகாப்பானதுதானா? மின்னணு வாக்குப்பதிவு (இவிஎம் மிஷின்) இயந்திரத்தை பற்றி இந்த தடவை மக்களுக்கு நிறைய சந்தேகம் வந்துள்ளது. மக்கள் எங்கே போனாலும் இவிஎம் மிஷினை மாத்திடுவாங்க, மாத்திடுவாங்க என்ற முறையிலேயே பேசுகிறார்கள். மக்கள் இவ்வளவு சந்தேகத்தில் இருக்கும் போது எந்த மாறுதலும் பண்ணாமல் இருப்பது சரியில்லை என்று தோன்றுகிறது. எந்த மிஷினாக இருந்தாலும் அதை யாராலும் ெஹக் பண்ணலாம் என்பதுதான் உண்மை. ஹேக் பண்ணப்படுகிறதா என்ற உண்மைக்கே போக வேண்டாம். அதற்கு பதிலாக இவிஎம் மிஷின் ஓட்டை எண்ணுவதற்கு சரியான விஷயமா என்று பார்க்க வேண்டும். அதில் சோதனை இருக்க வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு மிஷின்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்ததா என்று ஆடிட் பண்ண வேண்டும். இதற்காக தான் வி.பி.பேட் என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முறையை ஒரு தொகுதியில் 5 பூத்களில் மட்டும் ஆய்வு பண்ணுகிறார்கள். இந்த தேர்தலில் அதிக சந்தேகம் இருப்பதால் 100 சதவீதம் பூத்தையும் ஆடிட் பண்ண வேண்டும்.

* தேர்தல் முடிந்து 1 மாதம் கழித்து வாக்குகள் எண்ணுவதால் மக்களுக்கு இப்போது பல்வேறு சந்தேகங்கள் வந்துள்ளதே? சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்னர் ஒரு மாதம் கழித்துதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒரு மாதம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வைக்க போகிறார்கள். இதிலே மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளது. இவ்வளவு மாதம் ஏன் வைக்கிறார்கள் என்பதுதான் அவர்களின் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து எவ்வளவு விரிவாக சொன்னாலும் அவர்களுக்கு புரியவில்லை. எனவே, இந்த தேர்தலில் விவிபேட்  100 சதவீதம் ஆய்வு செய்தால் தான் நம்பக்தன்மை வரும். இதை தவிர இந்த குறுகிய காலத்தில் வேறு எதுவும் பண்ண முடியாது. இதையாவது செய்யலாம் என்பதுதான் எனது கருத்து.

* தமிழக சட்டசபை தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்? இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் ஒரு முக்கியமான தேர்தல். இது இந்தியா என்ற சிந்தனையை நம்புபவர்களுக்கும், அதை நம்பாதவர்களுக்கும் நடக்கும் சண்டை. இந்தியா என்பது சமத்துவமான எல்லோருக்கும், எல்லா விருப்பு, வெறுப்புகளையும், எல்லா வித்தியாசங்களையும் விரும்பும் ஒரு சிந்தனை. இதை கொண்டாடும் ஒரு சிந்தனை. இந்த சிந்தனை வேண்டாம். மெஜாரிட்டி தான் ஆள வேண்டும் என்று நினைப்பது இன்னொரு சிந்தனை. அந்த சிந்தனை இந்த மதத்திலும் இருக்கிறார்கள். அந்த மதத்திலும் இருக்கிறார்கள். ஒரு மதத்தை சார்ந்தவர்கள் அதை பாகிஸ்தான் என்று அப்பவே பிரித்து கொண்டு போய் விட்டார்கள். இன்னொரு குரூப் இங்கே தான் இருக்கிறது. அது 100 சதவீதம் வேலை செய்துதான் அது அதிகாரத்துக்கு வந்துள்ளது. இது இந்து, முஸ்லிம்களுக்கான சண்டை அல்ல. இது இந்தியா என்ற சிந்தனைக்கும், அதை விரும்பாதவர்களுக்கும் நடக்கும் சண்டை. அதில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதைதான் இந்த தேர்தலில் நாம் பார்க்க போகிறோம்.

* இந்த தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்? தமிழகம் அறிவு சார்ந்த தமிழகம். சமுதாயம். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். தமிழ் மொழியை ஒருமொழி அல்ல. ஒரு பண்புதான். எல்லாரையும் ஒன்றாக பார்க்கக்கூடிய பண்பு. அந்த பண்பு கண்டிப்பாக எல்லார் மனதிலும் இருக்கும். இந்த வெறுப்பு துண்டுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அந்த ஒரு மோடில்தான் பிஜேபிக்கு பதில் கொடுக்க போகிறார்கள். இன்றைக்கு இவர்களை எதிர்க்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மற்றதை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்கிறோம். எங்களிடம் இருக்கும் பிரச்னை எல்லாம் நாங்கள் அப்புறம் பார்த்துக் கொள்கிறோம். உன்னை விரட்டுவது தான் எங்கள் முதல் வேலை என்பதை இந்த தேர்தலில் தெளிவாக கொடுக்க போறாங்க. அவர்களும் சரி, அவர்கள் கூட இருக்கிறவர்களும் சரி எல்லாருக்கும் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

Tags : IAS ,Sasikant Senthil , Assembly election
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...