×

எனது மாப்பிள்ளையிடம் ஜாதி கேட்க மாட்டேன்: சொல்கிறார் கமல்

கோவை புலியகுளம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவரும், கோவை தெற்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளருமான கமல்ஹாசன் பேசியதாவது: இடஒதுக்கீடு மூலம் ஜாதி வெறி இன்னும் அதிகரிக்கிறது. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்றால், இடஒதுக்கீடு தேவையில்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப வாழ்வில் ேமலே வர வேண்டும். இதற்கு கடின உழைப்பு ேதவை. குறைந்த மதிப்பெண் பெற்றாலும், நமக்கு இடஒதுக்கீடு மூலம் சீட் கிடைத்துவிடும் என்ற குறுகிய வட்டத்திற்குள் மாணவர்கள் வாழக்கூடாது.  

இளைஞர்கள், தங்களது தகுதியை, தாங்களே வளர்த்துக்கொள்ள வேண்டும். இதில், முனைப்பு காட்டும் பட்சத்தில், இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, நீ என்ன ஜாதி, அவன் என்ன ஜாதி என கேட்கக்கூடாது. மாறாக, நாம் எல்லோரும் சகோதரர் என்ற நிலைப்பாட்ைட மட்டுமே முன்னிறுத்த வேண்டும். எனது வீட்டுக்குள் வரும் மாப்பிள்ளையிடம், நீ என்ன ஜாதி...? என்ற கேள்வியை நான் கேட்க மாட்டேன் என்றார்.

Tags : Kamal , Kamalhasan
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...