×

சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா

சேலம்: சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரான அழகாபுரம் மோகன்ராஜ் (67) கடந்த 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அடுத்த நாளில் இருந்து அவருக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, காய்ச்சல் வந்துள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சேலத்தில் இருந்து சென்னை சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Tags : Corona ,Salem West ,Temujin , Salem, Corona
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...