×

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கு: பாமக அன்புமணி எம்.பி.க்கு விழுப்புரம் கோர்ட் பிடிவாரன்ட்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013ல் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அன்புமணி எம்.பி. வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அன்புமணிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த ரத்து செய்த நகலை விழுப்புரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழங்க தாமதமாகியுள்ளதாகவும், இந்த உத்தரவு நகல் வழங்கியவுடன், இவ்வழக்கு ரத்தாகி விடும் என்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் மற்றும் பாமக தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Villupuram ,court ,Bamaka Anbumani , Violence, litigation, PMK , ANBUMANI
× RELATED விழுப்புரம் திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க அனுமதி