×

திமுக ஆட்சியில் அரசே நூல் கொள்முதல் செய்ய நடவடிக்கை.: வெளிச்சந்தை மின்சாரம் கொள்முதலில் லட்சம் மோடி ஊழல்.: கனிமொழி குற்றச்சாட்டு

நாமக்கல்: திமுக வெற்றி பெற்றவுடன் நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசு நூல் கொள்முதல் செய்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளர்களுக்கு நூல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தை ஆதரித்து பள்ளிப்பாளையத்தை அடுத்த பகுதியில் கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய கனிமொழி, குமாரபாளையம் தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ-வாகவும், மாநில அமைச்சர் பொறுப்பிலும் இருக்கும் அமைச்சர் தங்கமணி பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை என்றால் பதவி விலகுவேன் என கூறி இருந்ததை கனிமொழி சுட்டிக்காட்டினார்.

ஆனால இதுவரை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை பதவியையும் ராஜினாமா செய்ய முன்வரவில்லை என்றும் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கியதில் ஒரு லட்சம் மோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ள வேளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் வெற்றிநடை போடுகிறது என்று கூறுவதாக கனிமொழி விமரிசனம் செய்துள்ளார். மேலும் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று கனிமொழி உறுதி அளித்துள்ளார்.


Tags : Ditham ,Lakhs Modi scandal , DMK rule book in the state to purchase electricity purchases in the open market operation .: millions Modi .: Kanimozhi charges of corruption
× RELATED புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வழக்கு :...