×

புதுச்சேரியில் தோல்வி பயத்தில் பாஜக... பாமக தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு.: பாஜக- பாமக இடையே ரகசிய ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாமக இடம்பெற்று இருந்தது. ஆனால் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு இடம் கொடுக்காமல் பாஜக, அதிமுக, மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் 30 தொகுதிகளை பிரித்து கொண்டது.

இதனால் கோபமடைந்த பாமக பாஜக கூட்டணியில் இருந்து விலகி புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது. பின்னர் 10 தொகுதியில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பாமக போட்டியிடுகின்ற 10 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த 10 தொகுதிகளிலும் பாமகவுக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அதே 10 தொகுதிகளில் பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடுகின்றனர். அந்த 10 தொகுதிகளில் பாமகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதால் பாஜக கூட்டணி தோல்வி அடையும் என களநிலவரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாஜக 10 தொகுதிகளிலும் தோற்றுவிட கூடாது என அஞ்சி பாஜக மேலிட பார்வையாளர் மற்றும் மற்ற தலைவர்கள் ஒன்று கூடி பாமக அமைப்பாளரிடம் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் பாமகவின் கோரிக்கைகளை பாஜக ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால்10 தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவை பாமக வேட்பாளர்கள் இன்று திடிரென திரும்ப பெற்றனர். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக மற்றும் பாமக இரு கட்சி தலைவர்களும் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Pajaka ,Bahaka ,Bhāga , BJP fears defeat in Pondicherry
× RELATED தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தீவிரமாக தேடும் போலீசார்!