67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் திரைப்படம் அசுரன்; சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி.!!!

டெல்லி: 67-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். இன்று வெளியிடப்பட்ட விருது வென்றவர்கள் அறிவிப்பில், சிக்கிம் மாநிலம் சிறந்த சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் என்ற விருதை வென்றுள்ளது.

* திரைத்துறைக்கான சிறந்த மாநிலம் தேசிய விருது சிக்கிம் மாநிலத்துக்கு அறிவிப்பு

* நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிப்பு

* நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு ஜூரி விருது அறிவிப்பு

* சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷூக்கு அறிவிப்பு

* சிறந்த நடிகருக்கான விருதை ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் உடன் தனுஷ் பகிர்ந்து கொள்கிறார்.  

* சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு

* மணிகர்னிகா, ஜான்சி ராணி மற்றும் பங்கா படங்களில் நடித்த நடிகை கங்கனா ரணாவத்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு

 

* விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது இசையமைப்பாளர் டி. இமானுக்கு அறிவிப்பு

* சிறந்த நடனக் கலைஞராக ராஜூ சுந்தரத்துக்கு தேசிய விருது

* ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது அறிவிப்பு

 

* சிறந்த இந்தி தரைப்படத்துக்கான விருது மறைந்த சுஷாந்த் நடித்த சிச்சுசோரேவுக்கு அறிவிப்பு

* கேடி (எ) கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிப்பு

* சிறந்த சினிமா விமர்சகருக்கான தேசிய விருது கொல்கத்தாவை சேர்ந்த சோஹினி சத்தோபத்யாயாக்கு அறிவிப்பு

* நானி நடிப்பில் வெளியான ஜெர்சி படத்திற்கு சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு

* கன்னடத்தின் அவனே ஸ்ரீமன் நாராயணா படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சியாளராக விக்ரம் மோருக்கு தேசிய விருது அறிவிப்பு

* சிறந்த அனிமேசன் திரைப்படமாக ராதா தேர்வு

* சிறந்த குடும்பத்திரைப்படமாக பாதிர ஸ்வப்னம் என்ற மலையாளப்படம் தேர்வு

Related Stories:

>