×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உலக வன நாள் கொண்டாட்டம்

சத்தியமங்கலம் : மார்ச் 21ம் தேதி உலக வன நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் நிஹார் ரஞ்சன் உத்தரவின்பேரில், புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர்கள் கிருபா சங்கர், தேவேந்திரகுமார் மீனா ஆகியோரது மேற்பார்வையில் புலிகள் காப்பகத்தில் உள்ள பத்து வனச்சரகங்களில் நேற்று உலக வன நாள் அனுசரிக்கப்பட்டது.

பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட காராச்சிக்கொரை வனப்பகுதியில் உள்ள யானை வழித்தடங்கள், பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் சுஜில் குட்டை கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் நாட்டு வேம்பு, ஆல் மற்றும் அரச மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் வனத்துறை ஊழியர்கள், கிராம வனக்குழு உறுப்பினர்கள், ஜங்கிள் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உலக வன நாள் கொண்டாடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மரங்களை நட்டு வளர்த்து பாதுகாத்தால் மழைவளம் அதிகரிப்பதோடு வனவளம் செழிக்கும் என வனப்பகுதியில் ஒட்டியுள்ள கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags : World Forest Day ,Satyamangalam Tiger Reserve , Satyamangalam: March 21 is World Forest Day. According to Nihar Ranjan, the field director of the Satyamangalam LTTE archives
× RELATED கமுதி அருகே வேளாண் கல்லூரியில் உலக நீர் தினம்