×

கேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து பூச்சிகள்: பறவைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!!

திருவனந்தபுரம்: கேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து பூச்சிகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வில் கேரள மாநிலத்தில் உள்ள காடுகளில் 167 வகையான பறவை இனங்கள் இருப்பதும், 187 வகையான வண்ணத்து பூச்சி இனங்கள் இருப்பதும் தெரியவந்தது.மேலும் காட்டு நாய்கள், மரவெறுக்கு, நீர் நாய்கள், செங்கீரி ஆகியவற்றிலும் புதிய வகை இனங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டன. இந்த சர்வேயில் கேரள காடுகளில் 6 வகையான புதிய பறவை இனங்கள் மற்றும் 3 வகையான புதிய வண்ணத்து பூச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த புதிய வகை வண்ணத்து பூச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டதால் கேரள சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Kerala , கேரள வனபகுதி,வண்ணத்து பூச்சிகள்
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...