சூடாகிறது பூமி உருண்டை

1880ஆம் ஆண்டு முதல்இப்போது வரை பூமியின் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட ஒரு டிகிரி செல்சியஸை விட கூடுதல் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதை எப்படி கணக்கிட்டிருக்கிறார்கள் என்றால், உலகின் எல்லா இடங்களிலும்  உள்ள வெப்பநிலையை ஆவணப்படுத்தி, அதை சராசரியாகக் கணக்கெடுத்தால் வரும்  வெப்பநிலை ஒட்டுமொத்தமாக 1.18 டிகிரிகள் அதிகரித்திருக்கிறது. இந்த விகிதமும் வருடாவருடம் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் கவலை தரும் விஷயம். மேலும் பூமியின் சராசரி வெப்பநிலை அரை டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஒரு பட்டியல் தருகிறார்கள்.

*கோதுமை உற்பத்தி 7% குறையும்

*சோள உற்பத்தி 3% குறையும்

*கடல்நீர் மட்டம் 10 சென்டிமீட்டர்அதிகரிக்கும்

*பவளப்பாறைகள் நிறமிழப்பது 8% அதிகரிக்கும்.

*கனமழை பெய்யும் வாய்ப்பு 2%அதிகரிக்கும்.

*கடும் கோடை காலக்கட்டம் மேலும் 10 நாட்கள் கூடுதலாக இருக்கும்.அரை டிகிரிக்கே இதுதான் நிலைமை என்றால் மொத்த பாதிப்பை நாமே கணக்குப் போட்டுக்கொள்ளலாம். இப்படி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் வெப்பநிலையில், முதலாவது ஒரு டிகிரியும் அடுத்த ஒரு டிகிரியும் ஒன்றல்ல. இரண்டாவது டிகிரி அதிகரிப்புக்கு பாதிப்பு கூடுதல், மூன்றாவது டிகிரியின் பாதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும்.

Related Stories:

>