×

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 4,512 வேட்புமனுக்கள் ஏற்பு, ரூ.84 கோடி ரொக்கம் பறிமுதல்: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்புமனுக்களில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3.09 கோடி பேர், பெண்கள் 3.19 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தில் வாக்காளர்களாக 7,192 திருநங்கைகள் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் அளித்துள்ளார்.

நேற்று வரை ரூ.231.63 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.70 கோடி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.130.51 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 8,158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட 12.87 லட்சம் பேரில், 1.49 லட்சம் பேர் தபால் வாக்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை ஆணையம் எடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 2,152 புகார்கள் வந்துள்ளன. பெரும்பாலான புகார்கள் அனுமதியின்றி சுவர்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்தது தொடர்பானவை. பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தொடர்பாக 1,971 புகார்கள் பெறப்பட்டன. 1368 புகார் உண்மையானது என கண்டறியப்பட்டது. 1368 புகார்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டன. எஞ்சிய புகார்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. தேர்தலுக்கு முன்பாக சமூக விரோதிகளை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் 8,158 பேர் கைது இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் காவல்துறை மூலம் 515 சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உரிமம் பெற்று வைத்திருந்த 18,712 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. வாகனங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் 14,071 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதுவரை 6,598 பேருக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Legislative Elections ,Chief Electoral Commissioner , Chief Election Commissioner, Interview
× RELATED தேர்தல் பத்திரம் வாங்குவதில் புதிய...