×

தமிழகத்தில் இன்று முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்: மூலப்பொருட்கள் விலையேற்றம், லாரி வாடகை உயர்விற்கு எதிர்ப்பு

தூத்துக்குடி: தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, வேலூர், நெல்லை மற்றும் தருமபுரி பகுதிகளில் சுமார் 3,000 சிறு, குறு தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலையேற்றம், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் லாரி வாடகை உயர்வு போன்ற காரணங்களால் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்த முடியாத நிலைக்கு தற்போது உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளை பாதுகாக்க வலியுறுத்தி இன்று முதல் 10 நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருளை போக்கும் தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வு தற்போது இருளில் மூழ்கும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Matchboxes, factories, strike
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...