சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விவகாரம்...4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி.: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்-சார்பு ஆய்வாளர் மற்றும் 3 காவலர்களின் ஜாமீன் மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி சார்பு ஆய்வாளர் ராகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஃபிரான்சிஸ் ஆகியோர் மதுரை ஐகோட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது மனுக்களை விசாரித்த நீதிபதி கோரிக்கையை ஏற்க மறுத்து காவலர்கள் 4 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளார். 

Related Stories:

>