×

மீண்டும் கொரோனா பரவலால் பிரேசில் உள்பட 12 நாடுகளுக்கு பயணம் செய்ய பாகிஸ்தான் தடை விதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரேசில், போட்ஸ்வானா, கொலம்பியா, தென்ஆப்பிரிக்கா, தான்சானியா, பெரு, கொமொரோஸ், கானா, கென்யா, மொசாம்பிக், ருவாண்டா மற்றும் சாம்பியா ஆகிய 12 நாடுகளுக்கு பயண செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், இந்த தடை 23 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை 6.15 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,700 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சரின் ட்விட்டர் பதிவில், “பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதிகமான உயிரிழப்பை உருவாக்கக் கூடியது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன, மக்கள் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாவிட்டால், கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படும்” எனச் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவை வெளியிட்ட அறிவிப்பில், “பிரதமர் இம்ரான்கான் முதல் டோஸ் தடுப்பூசியை மட்டுமே கடந்த இரு நாட்களுக்கு முன் செலுத்தினார். 2 நாட்களில் எந்தத் தடுப்பூசியும் விரைவாகச் செயல்பட முடியாது. 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக 2 முதல் 3 வாரங்கள் தேவைப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

Tags : Pakistan ,Brazil , Pakistan, Corona
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்