×

வரலாறு காணாத கனமழையினால் வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆஸி.!: 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூட ஆணை.. ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சம்..!!

சிட்னி: 3 நாட்களாக பெய்து வரும் மிக கனத்த மழையினால் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி வரும் பெருமழையினால் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர். மேற்கு சிட்னி நகரத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற உத்தரவிட்டிருக்கும் மாநில அரசு, 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடவும் ஆணையிட்டுள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்டுள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் முக்கிய நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து சிட்னி நகர மக்கள் தெரிவித்ததாவது, மரங்கள் வேருடன் சரிந்து விழுந்து வருகின்றன. வெள்ளம் ஏராளமான சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன. நகரத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் சாலை வழி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் சிட்னி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பேரிடர் மீட்புக்குழுவினர் காப்பாற்றி நிவாரண முகாம்களுக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்ற அறிவிப்பு சிட்னி, கெம்ஸி நகர மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.


Tags : Aussie , Flood, Aussie, school, closure, thousands camp
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...