×

மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் 2வது இடத்தில் இருந்த தமிழக காவல்துறை 5வது இடத்திற்கு சரிந்தது : ஆய்வில் அதிர்ச்சி

சென்னை : மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் 2வது இடத்தில் இருந்த தமிழக காவல்துறை 5வது இடத்திற்கு சரிந்துள்ளது.மக்களின் புகார்களை விசாரித்து தீர்வு காண்பதில் 2019ம் ஆண்டில் தமிழக காவல்துறை 2ம் இடத்தில் இருந்தது. மாநில வாரியாக காவல்துறையின் திறன், செயல்பாடு குறித்து டாடா அறக்கட்டளை ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு தொடர்பான அறிக்கையையும் டாடா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதன்படி,  2020ல் மக்கள் புகார்களுக்கு தீர்வு கண்டதில் இந்திய அளவில் கர்நாடக காவல்துறை முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சட்டீஸ்கர் காவல்துறை 2ம் இடத்திலும் ஒடிசா, ஆந்திர பிரதேச காவல்துறை 3, 4 இடங்களையும் பிடித்துள்ளது. காவல்துறையின் திறனை மதிப்பிடும் 10 புள்ளிகளில் 5.7 பெற்று கர்நாடகா முதல் இடத்திலும் தமிழக போலீஸ் 5.4 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளது.

இந்திய நிதியியல் அறிக்கை என்ற பெயரில் வெளியான அறிக்கையில், தேசிய அளவில் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க சராசரியாக ரூ. 8000 மாநில அரசுகள் செலவிடுகின்றன.தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே மிகக்குறைவாக காவலர் பயிற்சிக்கு சராசரியாக வெறும் 2000 ரூபாய் செலவிடப்படுகிறது. மிசோரம் மாநிலத்தில் ஒரு காவலருக்கு பயிற்சி அளிக்க தலா ரூ.32,000-மும் டெல்லியில் ரூ.25,000மும் பீகாரில் ரூ.15,745மும் செலவிடப்படுகிறது. 2020 ஜனவரி நிலவரப்படி, தமிழக காவல்துறையில் 9.4% பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. தமிழக காவல்துறையில் 18.5% பெண் கான்ஸ்டபிள்களும், 24.8% பெண் அதிகாரிகளும் பணிபுரிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Nadu Police , Tamil Nadu Police, study
× RELATED ஐதராபாத்தில் நடந்த பூப்பந்து...