×

ராஜஸ்தானின் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் : கொரோனா பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கை!!

ஜெய்ப்பூர் : கொரோனா அதிகரிப்பு எதிரொலியால், ராஜஸ்தானின் 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அண்மை காலங்களில் உலக அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ராஜஸ்தானின் 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி அஜ்மீர், பில்வாரா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, உதய்பூர் உள்பட 8 நகரங்களில் இன்று (முதல் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இயங்கி வரும் சந்தைகளை இரவு 10 மணிக்கு மேல் மூடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைத்தவிர ராஜஸ்தானுக்கு வரும் வெளிமாநிலத்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லாதவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Rajasthan ,Corona , Rajasthan, Night Curfew, Corona Negative, Certificate, Mandatory
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்