டெல்லியில் அடகு வைத்துள்ள தமிழகத்தை திமுக ஆட்சி மீட்டெடுக்கும்: கனிமொழி பிரசாரம்

கரூர்: டெல்லியில் அடகு வைத்துள்ள தமிழகத்தை வரக்கூடிய திமுக ஆட்சி மீட்டெடுக்கும் என தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி பேசினார். கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி நேற்று பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை கடைவீதியில் திமுக வேட்பாளர் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி, தனக்கு நேர்ந்ததை புகாராக தெரிவிக்க சென்னை சென்ற போது, அதிகாரிகளால் மிரட்டப்பட்டார். வழியிலேயே ஒரு அதிகாரி, தடுத்து நிறுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. செய்யவில்லை. நீதிமன்ற கண்டிப்புக்கு பிறகு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் விவசாய சட்டம், குடியுரிமை சட்டம் போன்ற சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு தற்போது திரும்ப பெற அழுத்தம் தருவதாக கூறுகின்றனர். மக்களை முட்டாளாக நினைப்பவர்கள் முட்டாளாகி விடுவார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு, தற்போது ஒரு நிலைப்பாடு. இது ஒரு பச்சோந்திதனம். தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்ற வெறியில் அனைத்துக்கும் அதிமுக ஆதரவு தந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். தொழில் வளர்ச்சி இல்லை. டெல்லியில் அடகு வைத்துள்ள தமிழகத்தை வரக்கூடிய திமுக ஆட்சி மீட்டெடுக்கும். தமிழக முடிவுகள் அனைத்தும் தமிழகத்திலேயே எடுக்கப்படும். மீட்டெடுக்கும் கடமை இந்த தேர்தலில் மக்களுக்கு உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் இயக்கம் திமுக. இந்த ஆட்சி எதையும் செய்யாத ஆட்சி. எதையும் செய்யாமல் இருப்பவர்கள் தூக்கி எறிந்து விடுவதை போல இவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். நியாய விலைக்கடைகள் நியாயமாக. உண்மையாக இனி செயல்படும் என உறுதி தருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>