மெக்சிகோ ஓபன் அலெக்சாண்டர் சாம்பியன்

அகாபல்கோ: மெக்சிகோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாம்பியன் பட்டம் வென்றார்.பரபப்பான இறுதிப் போட்டியில் கிரீஸ் நட்சத்திரம் ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் (5வது ரேங்க்) நேற்று முன்தினம் மோதிய அலெக்சாண்டர் (7வது ரேங்க்) 6-4, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 2 மணி, 19 நிமிடத்துக்கு நீடித்தது. அலெக்சாண்டர் வென்ற 14வது ஏடிபி சாம்பியன் பட்டம் இது.

Related Stories:

>