உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் குழு போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம்

புதுடெல்லி: ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவுகளில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது. ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் சவுரவ் சவுதாரி, அபிஷேக் வர்மா, ஷாஷர் ரிஸ்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 17-11 என்ற புள்ளிக் கணக்கில் வியட்னாம் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. மகளிர் பிரிவு பைனலில் இந்தியாவின் மானு பேக்கர், யாஷஸ்வினி தேஸ்வால், ஸ்ரீ நிவேதா பரமானந்தம் அபாரமாக செயல்பட்டு 16-8 என்ற புள்ளிக் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது.

Related Stories:

>