இந்தியாவுடன் ஒருநாள் தொடர் இங்கிலாந்து அணி அறிவிப்பு

புனே: இந்திய அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை இழந்த நிலையில், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் கடும் நெருக்கடியுடன் களமிறங்குகிறது. இந்த தொடருக்கான 14 வீரர்கள் அடங்கிய இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்படும் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சிகிச்சைக்காக நாடு திரும்புகிறார். ஐபிஎல் தொடரில் தொடக்க லீக் ஆட்டங்களிலும் அவர் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. ஜேக் பால், கிறிஸ் ஜார்டன், டேவிட் மாலன் மாற்று வீரர்களாக இணைந்துள்ளனர்.இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், பட்லர், சாம் கரன், டாம் கரன், லிவிங்ஸ்டோன், மேட் பார்கின்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.

Related Stories:

>