எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.,யுமான டி.ஆர்.பாலு தாம்பரம் நகராட்சி 1வது வார்டு மற்றும்  9, 37, 39 ஆகிய வார்டுகளில் வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திமுக ஆட்சி அமைந்ததும் செயல்படுத்த இருக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொது மக்களிடம் எஸ்.ஆர்.ராஜா எடுத்துரைத்தார். மேலும், தன்னை வெற்றி பெற செய்ய, அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், என்றார்.  அப்போது அவரிடம், அங்கு கூடியிருந்த பொதுமக்கள், தாம்பரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை பணிகளை திமுக ஆட்சி வந்தவுடன் முடித்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற எஸ்.ஆர்.ராஜா, திமுக ஆட்சி அமைந்ததும் கிடப்பில் உள்ள அந்த பணிகள் அனைத்தும் முடித்து தரப்படும் என்றார்.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவஅருள்பிரகாசம், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் யாக்கூப், தேசிய லீக் மாவட்ட தலைவர் அக்பர் அலி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More