×

அடையாறு ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர்: பிரபாகர் ராஜா வாக்குறுதி

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா,  தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் நகர் தெற்கு பகுதி 137  வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 28 கிலோ மீட்டர் நடந்தே வீடு வீடாக சென்று,  கலைஞர் அரசின் முந்தைய சாதனைகளையும், அதிமுக அரசின் 10 ஆண்டு வேதனைகளையும் எடுத்துரைத்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்ற திமுக தேர்தல் அறிக்கையை விளக்கி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள், ‘இங்கு அடையாறு ஆற்றங்கரையை ஒட்டி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும். கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். பட்டா பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என கூறினர். இவற்றை கேட்ட பிரபாகர் ராஜா, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

பட்டா பிரச்னை பரீசிலனை எடுத்து கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் கொண்டுவரப்படும். விருகம்பாக்கம் தொகுதி முதன்மை தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்று வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தின் போது பகுதி செயலாளர் கே.கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ், வட்ட செயலாளர்  பி.கே.குமார்,  பூக்கடை பழனிச்சாமி, கதிரேசன், அஜந்தா ரவி, சசிகுமார், தணிகாசலம், செல்லா, நிஷா, ஐபி. ஜெயச்சந்திரன், கார்த்திக், மணிமுருகவேல், விக்கி, தெய்வமணி, கோபி குமார், கதிரேசன், சரத், சசி மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடன் சென்றனர்.

Tags : Adyar River ,Prabhakar , Adyar River, Barrier, Prabhakar Raja
× RELATED “மீண்டும் மோடி வென்றால் நாடே...