×

3 பெண்களை திருமணம் செய்து மோசடி வாழ மறுத்த ஆஸ்திரேலிய பெண்ணின் ஆபாச வீடியோ வெளியிட்டு மிரட்டல்: சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

சென்னை: ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், திருமண இணையதளம் மூலம் சென்னை தாம்பரத்தை சேர்ந்த சபீக் அகமது என்ற ஐடி இன்ஜினியரை, கடந்த 2019ம் ஆண்டு 3வது திருமணம் செய்து கொண்டேன். சபீக் அகமதுவுக்கும் இது 3வது திருமணம். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்தபோது, நான் கர்ப்பமானேன். இது பிடிக்காமல் என்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்தார். இதுகுறித்து நான் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்து இருந்தேன். பிறகு கணவருடன் வாழ பிடிக்காமல் நான் ஐதராபாத்தில் உள்ள எனது தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில், சபீக் அகமது போன் ெசய்து தன்னுடன் குடும்பம் நடத்தும்படி அழைத்தார். நான் அவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர், திருமணத்துக்கு பிறகு நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உன் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என்று மிரட்டினார்.

அதோடு இல்லாமல் அவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். மேலும், எனது வாட்ஸ் அப் எண்ணிக்கு வீடியோ, புகைப்படங்களும் அனுப்பி மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், சபீக் அகமதுவை பிடித்து விசாரணை நடத்தினர்.  அதில், சபீக் அகமது பீகாரை சேர்ந்தவர். வியாபாரம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர், அவரது பெற்றோருடன் சென்னையில் குடியேறி உள்ளார். கான்பூரை ேசர்ந்த பெண்ணை சபீக் அகமது முதல் திருமணம் ெசய்துள்ளார். அந்த பெண்ணை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். அவரையும் சபீக் அகமது இருவரும் தனிமையில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 பிறகு பெங்களூரை சேர்ந்த பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளார். அவரையும் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டியுள்ளார். இதனால், அவரும் பிரிந்து சென்றுவிட்டார். 3வதாக திருமணம் செய்த பெண்ணையும் அதேபோல் வீடியோ எடுத்து அனுப்பி மிரட்டியது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மென்பொறியாளர் சபீக் அகமதுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : 3 women, married, fraud, software engineer, arrested
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது