×

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு அடிக்கு மேல் அடி திரிணாமுல் காங்.கில் இருந்து சுவேந்துவின் தந்தையும் விலகல்: எம்பி பதவியையும் உதறினார்

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவரும், எம்பி.யுமான  சிசிர் அதிகாரி, அமித்ஷா முன்னிலையில் பாஜ.வில் நேற்று இணைந்தார்.  திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர் சிசிர் அதிகாரி. இவருடைய மகன்கள் சுவேந்து அதிகாரி. சவுமேந்து அதிகாரி. இருவரும் சில மாதங்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, பாஜ.வில் இணைந்தனர். நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரிதான் போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து தனது மகன்கள் விலகி பாஜ.வில் இணைந்த போதிலும், சிசிர் அதிகாரி மட்டும் அக்கட்சியிலேயே நீடித்தார். அவரும் பாஜ.வில் இணைவாரா? அல்லது விசுவாசம் காரணமாக திரிணாமுல்லில் நீடிப்பாரா? என்ற விவாதங்கள் தொடர்ந்து வந்தன.

இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று எக்ராவில் நடைபெற்ற பாஜ.வின் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முன்னிலையில் சிசிர் அதிகாரியும் பாஜ.வில் இணைந்தார். முன்னதாக, தனது எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பாஜ.வில் இணைந்தது பற்றி சிசிர் அளித்த பேட்டியில், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் என்னை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் நெருக்கடியால்தான் பாஜ.வில் இணைந்துள்ளேன். திரிணாமுல்லில் அவமதிக்கப்படும் மற்ற தலைவர்களும் பாஜ.வில் இணைய வேண்டும்,’’ என்றார். மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திரிணாமுல்லில் இருந்து செல்வாக்குமிக்க தலைவர்கள், எம்பி.ககள். எம்எல்ஏ.க்கள் ஒருவர் பின் ஒருவராக விலகி பாஜ.வில் இணைந்து வருவதால், மம்தாவுக்கு அடிக்கு மேல் அடி விழுந்து வருகிறார்.

மற்றொரு மகனும் இணைவாரா?
ஏற்கனவே 2 மகன்கள் பாஜ.வில் இணைந்து விட்ட நிலையில், சிசிர் அதிகாரியின் மற்றொரு மகனான திப்யேந்து அதிகாரி, தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசில் நீடித்து வருகிறார். இவரும் விரைவில் பாஜ.வில் இணைவார் என்ற யூகங்கள் வலுத்துள்ளது.

Tags : Svendu ,Trinamool Congress , Mamta, Trinamool, Cong.Gill, Vendu's father, divorced
× RELATED பெறும் வாக்குகளுக்கு இணையாக மரம் நடுவேன்: நடிகரின் வித்தியாச வாக்குறுதி