×

உலக அளவிலான மிக வலுவான ராணுவம் இந்தியாவுக்கு 4ம் இடம்: முதலிடத்தில் சீனா

புதுடெல்லி: உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியலில் இந்தியா 4வது இடத்திலும், சீனா முதலிடத்திலும் இடம் பெற்றுள்ளன. உலகின் வலிமையான ராணுவங்கள் குறித்த பட்டியலை பாதுகாப்பு துறை சம்மந்தப்பட்ட மிலிட்டரி டைரக்ட் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. இதில், ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் பட்ஜெட், ராணுவ வீரர்கள், வாகனங்கள் எண்ணிக்கை, விமானம், கப்பல், தரைவழி படைகளின் எண்ணிக்கை, அணுசக்தி, சராசரி ஊதியம், ஆயுத பலம் ஆகியவற்றை கொண்டு 100 புள்ளிகள் அடிப்படையில் டாப்-10 நாடுகள் பட்டியலிடப்பட்டு உள்ளது.இப்பட்டியலில், இந்தியா 61 புள்ளிகளுடன் உலகின் வலிமையான 4வது ராணுவமாக இடம் பெற்றுள்ளது. 81 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 2வது இடத்திலும் (74 புள்ளி), ரஷ்யா 3வது இடத்திலும் (69 புள்ளி) உள்ளன. பிரான்ஸ் (58 புள்ளி), சவுதி அரேபியா (56), தென் கொரியா (55), ஜப்பான் (45), இங்கிலாந்து (43), ஜெர்மனி (39) ஆகிய நாடுகள் முறையே 5 முதல் 10ம் இடம் வரை பெற்றுள்ளன.

* உலகிலேயே ராணுவத்திற்காக மிக அதிகமாக அமெரிக்கா. ரூ.53.4 லட்சம் செலவிடுகிறது. . சீனா ₹19.12 லட்சம் கோடியும், இந்தியா ₹5 லட்சம் கோடியும் ஒதுக்குகின்றன.
* அமெரிக்கா 14,141 ரஷ்யா 4,682, சீனா 3,587 போர் விமானங்கள் வைத்துள்ளன.
* ரஷ்யா 54,866, அமெரிக்கா 50,326, சீனா 41,641 பீரங்கிகள், கவச வாகனங்கள் வைத்துள்ளன.
* சீனா 406 போர் கப்பல்கள் வைத்துள்ளது. ரஷ்யா 278, அமெரிக்கா 202 போர்க்கப்பல்கள் வைத்துள்ளன.


Tags : India ,China , Worldwide, strongest, Army India, 4th place
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...