சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இன்ஸ்பெக்டர்கள் கூண்டோடு மாற்றம்: தமிழகம் முழுவதும் 277 பேர்; டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை:   தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீசாரை மாற்ற தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை பின்பற்றாமல் இன்ஸ்பெக்டர்கள் யாரும் மாற்றப்படாமல் இருந்தனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது திடீரென சென்னை மாநகர காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றிய 221 இன்ஸ்பெக்டர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 277 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு: தமிழ்நாடு போலீஸ் அகடாமியில் இருந்து திருமலைகொழுந்து திருவிக நகர் குற்றப்பிரிவுக்கும்,தமிழ்நாடு போலீஸ் அகடாமியில் இருந்த சுந்தரராஜா ராயிலாநகர் காவல்நிலையத்திற்கும், தமிழ்நாடு போலீஸ் அகடாமியில் இருநத் புஷ்பம் பள்ளிக்கரணை குற்றப்பிரிவுக்கும், தமிழ்நாடு போலீஸ் அகடாமியில் இருந்த ரூபி தேவா சத்தியராணி எஸ்ஆர்எம்சி குற்றப்பிரிவுக்கும், தமிழ்நாடு போலீஸ் அகடாமியில் இருந்த தேவி அசோக் நகர் குற்றப்பிரிவுக்கும், காட்பாடி ரயில்வே இன்ஸ்பெக்டராக இருந்த சித்ரா செங்குன்றம் குற்றப்பிரிவுக்கும், வேளச்சேரி சட்டம் ஒழுங்கில் இருந்த ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் முத்தாபுதுபேட் சட்டம் ஒழுங்கிற்கும், எழும்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டராக இருந்த பத்மாகுமாரி சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், தூத்துக்குடி சிபிசிஐடியில் இருந்த பாஸ்கரன் ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவுக்கும், மாநில குற்ற ஆவணம் காப்பகத்தில் இருந்த நாக கவிதா கோடம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், மாநில குற்றஆவண காப்பகத்தில் இருந்த தமிழ்செல்வி மயிலாப்பூர் குற்றப்பிரிவுக்கும், பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த சித்ரா அண்ணாசதுக்கம் குற்றப்பிரிவுக்கும்,

பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிடத்தில் இருந்த காளிஸ்வரி ஐஸ்அவுஸ் குற்றப்பிரிவுக்கும், சிசிஐடபிள்யூ -சிஐடியில் இருந்த தாமஸ் ஜேசுதாசன் மாம்பலம் குற்றப்பிரிவுக்கும், மேற்கு மண்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜேஸ்வரி மெரினா குற்றப்பிரிவுக்கும், மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கீதா அபிராமபுரம் குற்றப்பிரிவுக்கும், மேற்கு மண்டலத்தில் இருந்த முருகாசலம் சூளைமேடு குற்றப்பிரிவுக்கும், மேற்கு மண்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுலேகா வடபழனி குற்றப்பிரிவுக்கும், மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வீரம்மாள் கே.கே.நகர் குற்றப்பிரிவு என சென்னை மாநகர காவல் துறைக்கு தமிழ்நாடு போலீஸ் அகடாமி, ரயில்வே, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு, சிபிசிஐடி, மாநில குற்றஆவண காப்பகம், பொருளாதார குற்றப்பிரிவுகளில் இருந்து 221 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சென்னை மாநகர காவல் துறையில் இருந்து 56 இன்ஸ்பெக்டர்களை சிபிசிஐடி, சென்னை ரயில்வே, பொருளாதார குற்றப்பிரிவு, தமிழ்நாடு போலீஸ் அகடாமி, சைபர்குற்றப்பிரிவு என 277 பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளர்.

Related Stories:

>