×

படிப்படியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று: சத்தீஷ்கர் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் உடனடியாக மூடப்படும் என அறிவிப்பு !

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் உடனடியாக மூடப்படும் என்று சத்தீஷ்கர் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்று மட்டும் நாடு முழுவதும் 40 ஆயிரத்து 953 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களும் திறக்கப்பட்டன. ஆனால், சத்தீஷ்கரில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களை நாளை முதல் உடனடியாக மூட சத்தீஷ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில முதல்வர் ரவீந்திர சௌபாய் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி,கல்லூரிகள் மூடப்படுவதாகவும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chhattisgarh , Corona, Chhattisgarh, Colleges, Announcement
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில்...